எம்.கே.நாராயணனை செருப்பால் அறைந்த நபர் புழல் சிறையில் அடைப்பு!

151104163547_mknarayananformer_indian_national_security_advisor_640x360_bbc_nocredit

ஹிந்து நடத்திய கருத்தரங்கில் முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்

சென்னையில் முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனை செருப்பால் அறைந்த நபரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னையிலிருந்து வெளியாகும் “தி ஹிந்து” நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பினால், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து நேற்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.

151104164944_mknarayananmeetingchandrahasan_512x288_bbc_nocredit

கருத்தரங்கில் பேசிய எம்.கே.நாராயணன், சந்திரகாசன்

அதில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக தெரிகிறது.

அந்த நபர் நாராயணனைத் தாக்கும்போது, “எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்” என்று கூறியபடியே அடித்தார். இதில் இரண்டு – மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்தன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளியுள்ளார்.

திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை, அவரது அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்குள் அங்கு விரைந்த போலிசார், பிரபாகரனைக் கைது செய்தனர். கைதான நபர் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எம்.கே நாராயணன் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

அரசியல் அனுபவம் இல்லாத நாராயணன், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், உண்மைக்கு புறம்பான செய்திகளை அவரிடம் சொல்லி, இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

151104163714_prabakaran_mknarayanan_attacker_512x288_bbc_nocredit

தாக்கிய பிரபாகரன்

தமிழர்களுக்கு ஆதரவாக எங்கு போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும், அங்கு சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிவித்த பிரபாகரன், இலங்கை அதிபராக மகிந்த இருந்த காலப்பகுதியில், அவர் இந்தியா வந்த போது கூட தான் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கூட்டத்திற்கு எதிராக மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top