மார்ச் 20 – வரலாற்றில் இன்று!

Albert-Einstein1916 – அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

1934 – ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர்.

1942 – போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1942 – மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினார் கொல்லப்பட்டனர்.

1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.

1974 – லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் மரணமடைந்தனர், 1,300 பேர் காயமடைந்தனர்.

2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top