தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.

DSCN1284

 

2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர்.

DSCN1239

ஈழத்தில் 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம்.

DSCN1243

 

மேலும், பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம்.

DSCN1288

 

இவர்கள் இணைந்து நடத்தும் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை எதிர்க்கும் வகையில் இன்று மாலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது எம்.கே.நாராயணன், என்.ராமின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

DSCN1342

DSCN1336

 

 

DSCN1321

DSCN1329

DSCN1358

DSCN1362

இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் முன்னனி, தமிழ்த்தேச குடியரசு இயக்கம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தமிழக மக்கள் ஜனநாயக முன்னனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Scroll To Top