சீக்கிய கலவரத்துக்கு எதிரான வழக்கு: அமெரிக்க கோர்ட்டில் தீர்ப்பு நிறுத்தி வைப்பு

sikh-riots20032014கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு ஒன்று, மன்கட்டன் பெடரல் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில் இறுதி விவாதம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான வக்கீல் ரவி பத்ரா, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்றும், ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் எந்த ஒரு அன்னிய நாடுகளும் தலையிட முடியாது என்றும் வாதிட்டார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top