விஜய்யுடன் மீண்டும் இணையமாட்டேன் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

Capture

அட்லீ படத்தை முடித்து கையோடு இயக்குநர் ஹரியின் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம் விஜய். அதிரடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளது ஹரியின் படம். விஜய் தற்போது அட்லீ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் ஹரியும் சிங்கம்3 படத்திற்கான வேலைகளில் பிசியாக உள்ளார்.

2016 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்று வதந்தி கிளம்பியது. ஆனால் இது தற்போது முற்றிலும் பொய் என்கிறது நமக்கு கிடைத்த தகவல்கள்.

விஜய்க்கு ஹிட் கொடுக்குற இயக்குநர்களில் ஏ.ஆர்.முருகதாஸ் முக்கிய இடத்தில் உள்ளார். துப்பாக்கியும், கத்தியும் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் முருகதாஸ் தற்போது இந்தி படமான அகிரா என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை வைத்து பெயரிடப்படாத ஒரு படமும் அதன்பிறகு தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் என கிட்டத்தட்ட 2 வருடத்திற்கு தமிழுக்கு பாய் பாய் சொல்லிவிட்டாராம். இதனால் விஜய்யுடன் இவர் இன்னும் சில வருடங்களுக்கு இணையமாட்டார் என்பது தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top