டெல்லி உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க வேண்டும்: ஆளுநருக்கு வி.ஹெச்.பி. கடிதம்

Beef-steakடெல்லியில் உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைநிலை ஆளுரிடம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் விடுதிகள், உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருவதால் அதுகுறித்து உடனடியாக சோதனையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இதேபோல், மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க வலியுறுத்தி உள்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி காவல்துறைக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கடிதம் எழு‌தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top