மாட்டுக்கறி சாப்பிட்டால் உன் தலை இருக்காது: கர்நாடக முதல்வருக்கு பா.ஜ.க மிரட்டல்!

சித்தராமையாநான் மாட்டிறைச்சி உண்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். சித்தராமையாவின் கருத்துக்கு கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்  எஸ்.என். சென்னபசவப்பா , ” சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சிமோகா வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும். இங்கு வந்து பசுவை வெட்டி பார்க்கட்டும். அவரது தலையை உடலில் இருந்து எடுத்து நாங்கள் கால்பந்து விளையாடுவோம்” என்று பகீர் கருத்துக்களை கூறியுள்ளார்.

இதனிடையே சிமோகா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரசன்ன குமார், சென்னபசவப்பா மீது போலீசில் புகாரளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top