டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது? அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன ?

dengue-feverடெங்கு என்பது ஏடஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசு கடிப்பதால் ஏற்படும் வைரஸ் காய்ச்சலாகும்.இது டெங்கு வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் பொதுவாக நல்ல நீரிலேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.இவ்வகை கொசுக்களின் வாழ்நாள் 2 வாரங்கள் மட்டுமே. 2 வாரங்களில் 3 முறை முட்டையிடும் இவ்வகை கொசுக்கள் குறைந்தது ஒவ்வொரு முறையும் 100 முட்டைகளை இடும்.
உலர்வான சூழல் இருந்தால் இந்த முட்டைகள் உயிர்ப்புடன் இருந்து அதற்கு தேவையான நல்ல சுத்தமாக நீர் கிடைக்கும் பட்சத்தில் குஞ்சுகளை பொரிக்கும்.முட்டையிடும் கொசுவில் டெங்கு வைரஸ் இருந்தால்,அதன் முட்டை மற்றும் குஞ்சுகளிலும் டெங்கு வைரஸ் காணப்படும்.

பொதுவாக பகல் வேலைகளிலேயே இந்த ஏடஸ் என்ற கொசு கடிக்கும்.எனவே பகல் நேரங்களில்கூட கொசு கடிப்பதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நோய் ஏற்படாமல் எப்படித் தடுப்பது?

சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்கடை நீர் மட்டுமல்ல, சாதாரணத் தண்ணீர் கூடத் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓவர் ஹெட் டாங்க் மூடி, ஏர் கூலர், மொட்டை மாடியிலும் தோட்டத்திலும் சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சாத்தியமில்லை என்றால், தேங்கிய நீரில் கொசு மருந்து அடித்து வையுங்கள்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

தலைவலி
கண் பின்புற வலி
பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
குமட்டலும் வாந்தியும்
வயிற்றுக்கடுப்பு
தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
பசியின்மை
தொண்டைப்புண்
மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள் — petechiae)[21] நிணநீர்க்கணு வீக்கம்
வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்

சிகிச்சை முறை

டெங்குவிற்கென்று பிரத்யேக சிகிச்சை கிடையாது.
காய்ச்சல், உடல் வலி என்று டெங்குவிற்கான அறிகுறிகள் இருந்தால் முதல் 2 நாட்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை மட்டும் சாப்பிடுங்கள்.
காய்ச்சல் குறையவில்லை என்றால், டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
கண்டிப்பாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்து சாப்பிடக் கூடாது. வலி நிவாரணிகளையும் தவிர்க்க வேண்டும். இதனால் ரத்தத் தட்டணுக்கள் குறைய வாய்ப்பு உண்டு.
நிறைய திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top