சென்னை ‘தி இந்து’ அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் போராட்டம்!

‘தி இந்து’ பத்திரிக்கையின் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக, சென்னையில் உள்ள ‘தி இந்து’ அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.

12200946_1255266351156920_852674789_n (1)

 

மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது.

12197224_1255266354490253_1986878948_o (1)

 

மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்குள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல் மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிக்கையாளர்களை பதவி நீக்கம் செய்வது வரை தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது.

12200844_1255266347823587_1985919935_n

 

இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக இந்த போராட்டம் நடைபெற்றது.

DSCN1211

இப்போராட்டத்தில் எழுத்தாளர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும், ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை” நாளை மாலை சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்துகிறார்கள். இந்த கருத்தரங்கத்தினை எதிர்த்து நாளை மியூசிக் அகாடமி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Scroll To Top