ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..! உண்மையில் என்ன நடந்தது?

Actor Vijay in Kaththi New Photos

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடித்த ‘கத்தி’ படம் 2014ம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகும் முன்னரே பல சோதனைகளை சந்தித்தது. இருந்தபோதிலும் இப்படம் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

தெலுங்கு திரையுலகம் இப்படத்தை ரீமேக் செய்வதில் முந்திக்கொண்டது. ஆனால் இப்படத்தில் நடிக்க எந்த நடிகரும் இதுவரை முன்வரவில்லையாம். இந்நிலையில் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இப்படத்தின் கதைக்கருவால் ஈர்க்கப்பட்டுவிட்டார் என்றும் இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.

இதையடுத்து தஞ்சை மாவட்ட மக்கள் மற்றும் தாகபூமி என்ற குறும்பட இயக்குனர், சிரஞ்சீவிக்கு சில அறிக்கைகள் விடுத்தனர். மேலும் அவரது ரசிகர்களும் ‘கத்தி’ ரீமேக்கில் நடிக்க வேண்டாம் என கூறியதால் சிரஞ்சீவி, கத்தி ரீமேக்கில் நடிப்பதில்லை என முடிவு செய்து விட்டாராம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top