இலங்கையில் போர் முடிந்தும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

vikneshwaranஇலங்கையில் போர் முடிவுக்கு வந்தப் பிறகும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கார்த்திகை 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 5 இலட்சம் மரங்களை நடும் திட்டத்தினை இலங்கை விவசாயத்துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழியில் விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் மரங்கள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முதலாவது மரத்தை நட்டு வைத்து பேசினார். போர் முடிவுக்கு வந்தபோதும் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை என்றும், கடந்த கால தவறுகளை சீர் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top