சென்னை ‘தி இந்து’ அலுவலக முற்றுகைப் போராட்டம்: மே 17 இயக்கம் அறிவிப்பு!

சென்னை ‘தி இந்து’ அலுவலகத்தை நாளை(02-11-2015) முற்றுகையிடப் போவதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவரது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது.

மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்குள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல் மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிக்கையாளர்களை பதவி நீக்கம் செய்வது வரை தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது.

இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.

இந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும் , அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீது தனது சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் இம்முற்றுகையை தோழமை இயக்கங்களுடன் இணைந்து மே17 இயக்கம் மேற்கொள்கிறது என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top