ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

ISL-kolkata

களைகட்டும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியை வசமாக்கியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் IANE HUME ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

மும்பையில் நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி , மும்பை சிட்டி எஃப் அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 34-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் அடித்தது.

JAIME GAVILAN கடத்திக் கொடுத்த பந்தை நட்சத்திர வீரர் IANE HUME கோல் ஆக்கினார். இதன்பின்னர் ஆட்டத்தின் 45-ஆவது நிமிடத்தில், கொல்கத்தா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, IANE HUME மற்றுமொரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 71-ஆவது நிமிடத்தில் மும்பை வீரர் BENACHOUR கோல் அடித்தார். இதனை தொடர்ந்து 77-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் பெர்னான்டஸ் தங்கள் அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். 82-ஆவது நிமிடத்தில் IANE HUME தமது மூன்றாவது கோலை அடித்தார்.

விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில், கொல்கத்தா அணி நான்கிற்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top