மோடி கொடும்பாவி எரிக்க முயன்ற மாணவர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய பா.ஜனதா தொண்டர்கள்

bjbஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜயவாடாவில் மாணவர் அமைப்பினர் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பா.ஜனதா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கையில் கருப்பு கொடி ஏந்தி வந்த அவர்கள் பிரதமர் மோடி கொடும்பாவியை எரிக்க முயன்றனர்.

அப்போது பா.ஜனதா அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். கொடும்பாவியை எரிக்க விடாமல் பிடுங்கினர்.

மேலும் மாணவர்கள் கையில் வைத்திருந்த கருப்பு கொடியை பிடுங்கி அந்த கம்பால் அவர்களை தாக்கினர். அதோடு கம்பால் அவர்களை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் அமைப்பைச் சேர்ந்த ரவிகிரன், நாகராஜ், தேஜா, நிரஞ்சன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பா.ஜனதாவினருக்கு பொறுமையும், சகிப்பு தன்மையும் இல்லை. மாணவர்கள் போராட்டத்தை அடக்க நினைத்தால் அது மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ராமகிருஷ்ணா எச்சரிக்கை விடுத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top