சோமாலியா, மொகதிசு ஓட்டலில் துப்பாக்கிய ஏந்திய மர்மநபர்கள் தாக்குதல், 8 பேர் உயிரிழப்பு

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் ஓட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் வெடிகுண்டுகள் நிரப்பட்ட காரை ஓட்டல் மீது மோதி வெடிக்கச்செய்தான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களுடன் வெகுநேரம் சண்டையிட்டு ஓட்டலை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ளதாக ஆப்பிரிக்க படை மற்றும் அரசு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோமாலியா எம்.பி.க்கள் செல்லும் ஓட்டல் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு அல்-ஷாபாப் தீவிரவாத இயக்கம் பெறுப்பு ஏற்று உள்ளது. அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உடைய இந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், குண்டு வெடிப்பை அடுத்து ஓட்டலுக்கு நுழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எதியோபியா எல்லையில், பாகோல் பகுதியில் ஆப்பிரிக்கா கூட்டு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் சண்டை நடைபெற்ற மறுநாள் இத்தக்குதலானது நடத்தப்பட்டு உள்ளது.
சோமாலியாவில் மையம் கொண்டுஉள்ள, அல்-ஷாபாப் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக போரிட அந்நாட்டு ராணுவத்திற்கு ஆப்பிரிக்க கூட்டு படையானது உதவிசெய்து வருகிறது.
சோமாலியாவில் பாதுகாப்பு நிலையானது தற்போது முன்னேறிஉள்ளது, ஆனால் மொகதிசுவில் தீவிரவாதிகள் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அண்டைய நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். கென்யாவின் கரிஸா பல்கலைக்கழகத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top