அமெரிக்கா தென் சீனக் கடலில் அத்துமீறினால் கடல், வான் வழியாக அமெரிக்கா மீது போர் தொடுப்போம்: சீனா எச்சரிக்கை

china_2604088fதென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அத்துமீறினால் கடல், வான் வழியாக போர் தொடுப்போம் என்று சீன கடற்படை தளபதி அட்மிரல் வூ செங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் கரணமாக பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான் புருணே உள்ளிட்ட நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

தென் சீனக் கடலில் பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை சீனா அமைத்து வருகிறது. அங்கு விமானப் படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படைத் தளம் ஆகியவற்றை சீனா கட்டமைத்து வருகிறது. இதற்கு அமெரிக்காவும் ஆசிய பசிபிக் நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று அமெரிக்கா அறிவுறுத்தியது. அதற்கு சீன அதிபரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் தென்சீனக் கடலில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவுகளில் கட்டுமானப் பணிகள் வேகமாகப் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆதாரமாக அந்தப் பகுதியில் அண்மையில் ரோந்து சுற்றிய அமெரிக்க போர் விமானம் ஏராளமான புகைப்படங்களை எடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சீனா வின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்பார்ட்டி தீவுக்கு மிக அருகில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். லார்சன் போர்க்கப்பல் கடந்து சென்றது. இதற்கு சீன தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அது சர்வதேச எல்லை, சீனாவின் கடல் பகுதி இல்லை என்று அமெரிக்கா வாதிட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில் சீன கடற்படை தலைமை தளபதி அட்மிரல் வூ செங்லி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தென்சீன கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அத்து மீறுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மின் ஜான் ரிச்சர்ட்டை கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்க கடற்படை, விமானப் படை தொடர்ந்து அத்துமீறினால் கடல்பரப்பு, வான் வழியாக கடுமையாக தாக்குதல் நடத்து வோம். இருநாடுகளும் பரஸ்பரம் மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய சம்பவம்கூட இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழலை ஏற்படுத்திவிடும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

தென்சீனக் கடல் விவகாரத்தில் இரு நாடுகளும் பிடிவாதமாக இருப்பதால் ஆசிய, பசிபிக் பிராந் தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top