தமிழக மீனவர் பிரச்னையில் தமிழக அரசின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை: இலங்கை அமைச்சர்

mahindaதமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசு விடுக்கும் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை என இலங்கை மீன்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் வளங்களை கொள்ளையிடுவதை விட, அவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களே மிகவும் ஆபத்தானவை என அவர் கூறியுள்ளார்.

இதனால் ஏற்படும் கடல் அரிப்பு உள்ளிட்ட இழப்புகளுக்கு இந்தியாவிடம் இழப்பீடு கோரப்படும் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top