பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் நிகழ்ச்சி நடத்த முழு பாதுகாப்பு: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

plபாகிஸ்தானைச் சேர்ந்த பாடகரான குலாம் அலியின் (74) கலை நிகழ்ச்சி மும்பையின் ஷண்முகானந்த ஹாலில் நடைபெற இருந்தது. இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி தொடர் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், தங்கள் பகுதியில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிவ சேனாவின் இந்த நடவடிக்கையால் இந்த கலை நிகழ்ச்சி அதன் ஏற்பாட்டாளர்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சி நடத்துவதற்கு பாதுகாப்பு அளிக்க தவறியதன் மூலம் மாநில அரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், குலாம் அலி மும்பையில் நிகழ்ச்சி நடத்த முழு பாதுகாப்பு வழங்கப்படும் என மாராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறும் போது, “போன முறை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள்தான் காரணம். குலாம் அலி அவர்கள் மீண்டும் மும்பையிலோ அல்லது மாநிலத்தின் பிற பகுதியிலோ நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால் அதற்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை.

நிகழ்ச்சிக்கு யாராவது தடை ஏற்படுத்த முயன்றால், அவர்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top