​தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது நடவடிக்கை தொடரும்: இலங்கை அரசு திட்டவட்டம்

Mangala Samaraweeraஎல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று இலங்கை  அமைச்சர் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இலங்கை அரசு பயப்படாது என்று கூறியுள்ள சமரவீர, எல்லை மீறி வந்து மீன்பிடிக்கும் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஜெனிவா தீர்மானம் மூலம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்ச உட்பட முப்படையினரும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமரவீர  கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top