இந்தியா பேஸ்புக்கின் முக்கிய சந்தை இங்கு 13 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.: மார்க் ஜூகர்பெர்க்

9632தில்லியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்  இன்று அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் நாம் நம் சமூகத்துகு மிக பொறுப்பு மிக்கவரகளாக இருக்க வேண்டும். நான் மாணவராக இருந்த போது நிறைய தவறு செய்துள்ளேன். உங்கள் தவறுகளுக்கு வருந்தாதீர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். யார் அனைத்து சவால்களையும் சந்திக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதையே உற்று நோக்குங்கள் என்றார். மேலும் இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது என்று அவரிடம் கேட்ட போது பேஸ்புக்கின் முக்கிய சந்தை இந்தியா. இங்கு 13 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். பலர் இன்டர்நெட் பயன்படுத்துவதில்லை. அதனால் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள இங்கு வாய்ப்புக்கள் அதிகம். இந்திய மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது அவசியம்.  இந்தியாவில் இருப்பது உற்சாகமாக உள்ளது. புது ஆற்றலை கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உங்களால் உலக நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்த முடியாது. இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு பில்லியனை தொட வேண்டும் என விரும்புகிறோம் எனவும் கூறினார்.  கேண்டி கிரஷ் (candy crush) கோரிக்கைகளை எவ்வாறு தடுப்பது என்று ஒரு மாணவர் கேட்ட போது அதற்கான தீர்வை காணும் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் எனவும் பேஸ்புக்கிடம் இருந்து எந்த மாதிரியான புதுமைகளை எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு

இனி வரும் காலங்களில் .ஹெட்செட் மூலமும் பேஸ்புக்கை பயன்படுத்தும் முறையை கொண்டு வர உள்ளோம். இதனால் உலகின் எந்த பகுதியில் இருந்தும் உங்களால் பேஸ்புக்கை பயன்படுத்த முடியும். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இன்னும் மேன்மையான கம்ப்யூட்டர் சிஸ்டம்களை உருவாக்க நினைக்கிறோம். அதன் மூலம் உலகின் பல மொழிகளை இன்னும் எளிதாக மொழி பெயர்க்கவும், எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும் எனவும் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top