2-வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

kohli20 ஓவர் உலக கோப்பை  கிரிக்கெட் பயிற்சி போட்டியில் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி நேற்று தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்தித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து, களம் இறங்கிய ரோகித் ஷர்மா 5 ரன்னிலும், ஷிகர் தவான் 14 ரன்னிலும், யுவராஜ் சிங் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 39 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த இந்திய அணியை கோலி- ரெய்னா சரிவில் இருந்து மீட்டது.

31 பந்தில் 54 ரன்கள் எடுத்த ரெய்னா, 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசினார். பின்னர் கோலியுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது. கோலி 74 ரன்னிலும், டோனி 21 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

அடுத்து 179 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 158 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அலி 46 ரன்னும், மைக்கேல் லம்பு 36 ரன்னும், புட்லர் 30 ரன்னும் எடுத்தனர்.

இந்திய தரப்பில், ஜடேஜா 2 விக்கெட்டும், புவனேஸ்வர்குமார், முகமது சமி, அஸ்வின், ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.இந்திய அணி அடுத்து பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை சந்திக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top