214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

South-Africa-won-india-by-214-runs_SECVPFதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் 2–2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்த நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் தென் ஆப்பிரிக்க வீரர்கள். டி காக், டி வில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோர் சதம் விளாசினர். டி காக் (109), பிளெஸ்ஸிஸ் (133) டி வில்லியர்ஸ் (119), மில்லர்ஸ் (22) ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 438 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 439 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் ரஹானே (87), தோனி (27), தவான் (60) ரன்களும் எடுத்தனர். 36 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஸ்டெயின் 3 விக்கெட்டுகளையும், ரபடா 4 விக்கெட்டுகளையும், தாஹிர் 2 விக்கெட்டுகளையும், அபாத் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தன் மூலம் 2-வது மோசமான தோல்வியை  சந்தித்தது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top