கிரிமியா மாகாணம் ரஷ்யாவுடன் இணைந்தது!

putin signs crimeaஉக்ரைன் நாட்டிலிருந்து பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிக்கப்பட்ட கிரிமியா மாகாணம் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு உக்ரைன் தனி நாடானது. முன்னதாக பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அப்போது அங்கு அதிபராக இருந்த யானுகோவிச் அதற்கு உடன்படவில்லை. இதனால், அங்கு தொடர் போராட்டங்கள் வெடித்தன.அதன் காரணமாக அதிபர் யானுகோவிச் ரஷ்ய எல்லையில் உள்ள கிரிமியா மாகாணத்தில் தலைமறைவானார். கிரிமியா மாகாணத்தில், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இந்நிலையில்,கிரிமியா மாகாணத்தை உக்ரைனிலிருந்து தனியாக பிரிப்பது குறித்து, அப்பகுதி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கிரிமியாவை, ரஷ்யாவுடன் இணைக்க 97 சதவீதம் மக்கள் ஆதரவளித்து வாக்களித்தனர். இதையடுத்து, 100 தொகுதிகளை கொண்ட கிரிமியா மாகாண சட்டசபை, உக்ரைனிலிருந்து சுதந்திரம் பெற்றதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, இந்த மாகாணத்தை, ரஷ்யாவின் ஒரு மாகாணமாக அங்கீகரிக்கும்படி, ரஷ்யாவிடம் விண்ணப்பித்தது.

இது தொடர்பான ஒப்பந்தம், மாஸ்கோவில், நேற்று கையெழுத்தானது. கிரிமியா பிரதமர், செர்ஜி அக்சியோனோவும், ரஷ்ய அதிபர், விளாடிமிர் புதினும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் மூலம், கிரிமியா, ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாகி விட்டதாக, அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதனை அமெரிக்கா தலைமையில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன; மேலும் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கவும் திட்டமிட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top