மாயமான மலேசிய விமான பயணிகளின் உறவினர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!

malaysia-planeமலேசிய விமான பயணிகளின் உறவினர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு கடந்த 8ஆம் தேதி அதிகாலை புறப்பட்டு சென்ற மலேசிய விமானம், 2 மணி நேரத்தில் மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் 26 நாடுகள் ஈடுபட்டும், அது என்ன ஆனது என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மாயமான விமானத்தில் பயணம் செய்த 239 பேரில் 153 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். அவர்களின் உறவினர்களுக்கு மலேசிய அரசிடம் இருந்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் சீனாவில் உள்ள மலேசிய தூதரை சந்தித்து முறையிட சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, மலேசிய விமானத்தில் பயணம் செய்த சீன பயணிகளின் உறவினர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top