உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் 4ஆவது இடத்திற்கு சீனா முனேற்றம்!

china arms exportஉலகளவில் ராணுவ ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் பிரான்சை பின்னுக்கு தள்ளி சீனா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

“ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்” நடத்திய ஆய்வில், ஏற்றுமதியில் கடந்த 4 ஆண்டுகளில் 212 சதவீதம் உயர்வை அடைந்துள்ளதையடுத்து பிரான்ஸ் நாட்டை சீனா பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஏற்றுமதி செய்துள்ள ஆயுதங்கள் 212 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய 5 ஆண்டுகளில் 2 முதல் 6 சதவீத அளவிலேயே சீனாவின் ஆயுத ஏற்றுமதி உயர்வு இருந்தது. இது சீனாவின் ராணுவத் தொழில்துறை அபார வளர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது. சீனா தயாரிக்கும் ராணுவத் தளவாடங்களின் விலை குறைவு என்பது சிறப்பு அம்சமாகும்.

உலகில் மிக அதிக அளவில் ஆயுத ஏற்றுமதி செய்து வரும் அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தை சீனா தற்போது பிடித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தில் உள்ள 35 நாடுகளுக்கு சீனா ஆயுத ஏற்றுமதி செய்துள்ளது. அவற்றில் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தற்போது நைஜீரியாவுக்காக போர்க்கப்பல் கட்டி வரும் சீனா, ஆயுத விற்பனையை அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்குப் போட்டியாக விரிவுபடுத்தி வருகிறது.

மேலும் அதிக அளவு ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top