பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் தோனி

srinivasan-ms-dhoni-12345பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இன்று சென்னையில் சந்தித்துள்ளார்.

சரியாக இன்று காலை 10:10 மணிக்கு அடையாரில் உள்ள ஸ்ரீனிவாசன் இல்லத்திற்கு வந்த தோனி,அங்கு ஸ்ரீனிவாசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கு தடை கேட்டு சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஸ்ரீனிவாசன் – தோனி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top