இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் : தமிழக கட்சிகள் கோரிக்கை

srilanka-1234567இலங்கையில் போர்குற்றங்கள் நடந்தது உண்மைதான் என அந்நாட்டு அரசு அமைத்த குழுவே உறுதி செய்துள்ள நிலையில், சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு இனியும் இலங்கையை நட்பு நாடு என்று கூறிக் கொண்டிருக்ககூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப் படுகொலைகள் குறித்து சர்வதேச, நம்பகமான, சுதந்திரமான விசாரணையை நடத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை போர்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அழுத்தம் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மாகாண சபை, தமிழக சட்டமன்றத் தீர்மானங்களின் அடிப்படையில் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதே போல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி இலங்கை அரசுடன் கண்டிப்போடு பேசி சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top