போனஸை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

bingo-bonusதொழிற்சாலை ஊழியர்களுக்கான போனஸ் தொகை உச்சவரம்பு உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிற்சாலை ஊழியர்களுக்கு தற்போது போனஸ் உச்சவரம்பு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ள நிலையில் இதை 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்த போனஸ் சட்டத்திருத்த மசோதா வழிவகை செய்கிறது. மேலும், அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே போனஸ் என்ற நிலையை மாற்றி 21 ஆயிரம் ரூபாய் வரை பெறுபவர்களுக்கும் போனஸ் உண்டு என்ற அம்சமும் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.

வணிகம் புரிவதை எளிதாக்குவதற்காக மத்தியஸ்த சட்டத்தில் திருத்தம் செய்யும் அவசரச் சட்டம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வணிக விவகாரங்களை கவனிக்க தனிப் பிரிவு அமைப்பதற்கான அவசரச் சட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top