கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி!

கனடா நாடாளுமன்றத்தின் 338 எம்.பி. இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஈழத்தமிழர்

தற்போதைய நிலையில் லிபரல் கட்சி 101 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 56 இடங்களுடன் பின் தங்கியுள்ளது. முக்கிய கட்சிகள் சார்பாக 5 தமிழர்கள் போட்டியிட்டனர், அதில்,ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் 6 ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இதில் லிபரல் கட்சி சார்பாக ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியான ராதிகா சிற்சபை ஈசன் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளார். இதேபோல் சாந்திக்குமார், செந்தி செல்லையா, ரோஷான் நல்லரத்தினம், கார்த்திகா கோபிநாத் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.  கனடாவில் ஆட்சி அமைக்க மொத்தம் 170 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top