மத்திய அரசுக்கு எதிராக தமிழ் எழுத்தாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

gfமனித நேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் “மத சார்பற்ற இந்தியாவும், இன்றைய நிலையும்” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் நடைபெற்றது.

.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தாம்பரத்தில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்த பெருந்திரள் பொதுக்கூட்டம் வரவேற்கின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.

இந்தியாவின் மதச்சார்பின்மையை சிதைக்கும் சக்திகளுக்கு வலுவூட்டும் மத்திய அரசை கண்டித்து, தங்களது சாகித்ய விருதுகளை திருப்பி அளித்து துணிச்சலாக மத்திய அரசுக்கு எதிராக தமது கண்டனங்களை பதிவுசெய்துள்ள 20 எழுத்தாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்நாட்டில் சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும்.

மக்களின் உணவு உரிமையில் தலையிடுகின்ற பயங்கரவாத சக்திகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் போக்கை உடனே நிறுத்தி, அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகின்ற வேலையில் மத்திய அரசு ஈடுபடவேண்டும் மத்திய அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்றப் பேரவையில் வைத்த கோரிக்கையை ஏற்று தஞ்சை மண்டலத்தில், காவேரி படுகையில் செயல்படுத்தவிருந்த மீத்தேன் திட்டத்தை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறது.

பொது சிவில் சட்டம் தொடர்பான சர்ச்சைகளை கிளப்பி வருகின்ற போக்கை இப்பொதுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது, அனைத்து மக்களுக்குமான தனியார் சட்ட உரிமைகள் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top