விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி மரணம்: உலகத் தமிழர்கள் அஞ்சலி!

thaminizhiபெண் விடுதலைப்புலி தமிழினி மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு உலகத் தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

பெண் விடுதலைப்புலி தமிழினி. இவரது உண்மையான பெயர் சிவகாமி ஜெயக்குமரன். இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளராக பதவி வகித்தவர். தமிழினி, 1991–ம் ஆண்டில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

2009–ம் ஆண்டு மே மாதம்வரை தமிழினி விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும், தமிழ் மக்களையும் தனக்கு மேலாக நேசித்து ஒரு போராளியாக வாழ்ந்தார்.

இறுதி யுத்தத்தின் போது, பிரபாகரனின் பெற்றோருடன் ராணுவத்திடம் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு விடுதலையான தமிழினிக்கு புற்றுநோய் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கிளிநொச்சியில் உள்ள பரந்தனில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை கிளிநொச்சியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழினி

தமிழினி மறைவுக்கு விடுதலைப்புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எம் மக்களுக்காக அல்லும் பகலும் இயங்கி கொண்டிருந்த எங்கள் தமிழினியின் இழப்பு எங்களோடு அன்றாடம் பழகிய ஒருவரை இழந்து விட்டோம் என்பன போன்ற உணர்வலைகளை தோற்றுவிக்கிறது.

பெண் போராளிகளிடையே தன்னம்பிக்கையை வளர்த்து உலக அறிவு மற்றும் காலத்திற்கேற்ற அரசியல் நிலைமை போன்றவற்றில் அவர்கள் தேர்ச்சி பெற கடுமையாக உழைத்தார். இன்று அவர் எம்முடன் இல்லை. இவரை போன்று விடுதலைப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து விழிப்புடன் அடைந்ததும், நோய் வாய்ப்படும் பல போராளிகள் சமீபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

அவர்களின் தாயக விடுதலை வேட்டையை எவராலும் அழித்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. எங்கள் வாழ்விற்காக உங்களை வருத்திநீங்கள் சிந்திய ரத்தத்தையும், வியர்வையையும் தமிழர் நாம் மறவோம். இலக்கு வெல்லும் வரை உங்களது கனவோடு எமது பயணம் தொடரும் என்பதை உறுதியோடு கூறிக்கொள்கிறோம். போராளி தமிழினி மறைவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேம்” என்று கூறப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top