தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்தது!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்து உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது. இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும் எதிரெதிராக மோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலை முதலே விருவிருப்பாக நடைபெற்று வந்த இந்த தேர்தலில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஷால், ராதாரவி, எஸ்.வி.சேகர், கார்த்தி உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் வாக்களித்தனர். இந்த தேர்தலின் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள், வேட்பாளர்கள் மட்டுமே இருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், வாக்களித்த நடிகர்கள் உள்ளிட்டோர் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.

வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top