ஆந்திராவில் பேருந்துடன் மினி லாரி மோதி பயங்கர விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கண்டுகுர் அருகே, பேருந்தும் மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

 பேருந்து விபத்து

விபத்தில் காயமடைந்த மேலும் சிலர், ஓங்கோலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, கண்டுகுரில் இருந்து 40 பேர் கொண்ட குழுவினர் அந்த மினி லாரியில் பயணித்துள்ளனர்.

அப்போது எதிரே வந்த பேருந்தின் மீது மினிலாரி மோதியதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. பேருந்தின் ஓட்டுநரும், கிளீனரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கண்டுகுர் காவல்துறையினர், விபத்து நிகழ்ந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top