ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தாற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு

UN-1ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தாற்காலிக உறுப்பினர்களாக எகிப்து, ஜப்பான், செனகல், உக்ரைன், உருகுவே ஆகிய 5 நாடுகள் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த ஐந்து நாடுகளும் அந்தக் கவுன்சிலின் தாற்காலிக உறுப்பினர்களாக செயல்படவிருக்கின்றன.
தற்போது, ஐந்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தாற்காலிக உறுப்பினர் இடங்களில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2 இடங்களும், ஆசியா-பசிபிக் நாடுகளுக்கு ஓர் இடமும், லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளுக்கு ஓர் இடமும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஓர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் சாட் மற்றும் நைஜீரியாவும், ஆசியா பசிபிக் நாடுகளில் ஜோர்டானும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் சிலியும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் லிதுவேனியாவும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தாற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.
அந்த நாடுகளின் உறுப்புக் காலம் ஆண்டு இறுதியில் முடிவுறும். அந்த இடங்களுக்கு எகிப்து, ஜப்பான், செனகல், உக்ரைன், உருகுவே ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், ஆகிய நாடுகள் உள்ளன. கவுன்சிலின் முடிவுகளை ரத்து செய்யும் “வீட்டோ’ அதிகாரம் இந்த ஐந்து நாடுகளுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top