ஐ.நா.சபை பிரதிநிதிகள் சாட்சிகளாக கொண்டு மியான்மர் அரசு – புரட்சிப் படை இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.

myan-MMAP-mdமியான்மர் அரசுக்கும் 8 சிறுபான்மையின புரட்சிப்படையினருக்கும் இடையே நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாக இது கருதப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இப்போதைய அதிபர் தெய்ன் செய்ன் தலைமையிலான அரசுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது. ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய தெய்ன் செய்ன், இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்று வார் என்று கருதப்படுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி தலைநகர் நேபிடாவில் நேற்று நடைபெற்றது. இதில் மியான்மர் ராணுவ தளபதி மற்றும் புரட்சிப் படையின் தளபதிகள் கலந்து கொண்டனர்.

மேலும், சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா.சபை பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் சாட்சிகளாக பங்கேற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top