விமானம் வெடித்து சிதறவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை : ஐ.நா. பரபரப்பு தகவல்!

malaysia airlinesமாயமாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், எந்த இடத்திலும் வெடித்துக் சிதறவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.

வியன்னா நாட்டைச் சேர்ந்த நியூக்ளியர் டெஸ்ட் பேன் ட்ரீட்டி அமைப்பு நடத்திய தேடுதல் பணியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜராக் அறிவித்துள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்பதை, சுமார் 3 முதல் 4 தொழில்நுட்ப முறைகள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விமானம் வெடித்து சிதறி இருப்பதற்கோ, நீரில் மூழ்கி இருப்பதற்கோ ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் மூலம், விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்பதை கூறலாம். ஆனால், அதுவும் முற்றிலும் உறுதியாகக் கூற இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top