ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜெயலலிதா கடிதம்

ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதிஉள்ளார்.
ஆந்திராவிற்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் தமிழர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட சேஷாசலம் வனப்பகுதிக்கு செம்மரங்களை வெட்ட சென்றதாக திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 89 தமிழக கூலித்தொழிலாளிகளை போலீசார் கைது செய்தனர். இதுவரையில் ஆந்திராவிற்கு, செம்மரம் வெட்ட சென்றதாக 516 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், பழங்குடியினர் மற்றும் கல்வியறிவு இல்லாத பிழைப்புக்காக இந்த பணியினை செய்பவர்கள்.
ஆந்திரா போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழர்கள் ஜாமீனில் விடுதலை ஆக வாய்ப்பு இருந்தும், சட்ட உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். குழந்தையுடன் அவர்களது குடும்பம் பெரிதும் தவித்து வருகிறது. ஆந்திராவில் கைதுசெய்யப்பட்டவர்களை சிறையில் சென்றும் பார்க்கும் அவர்கள் ஏமாற்றப்படுவதாகவும் தெரியவந்து உள்ளது. இந்நிலையில் தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதிஉள்ளார்.
வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழர்கள் 516 பேரை ஜாமீனில் விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். வனம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் 516 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதநிலையில் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய முடியும். போதிய சட்டஉதவி கிடைக்காததால் சிறையில் உள்ளவர்களால் ஜாமீன் பெற முடியவில்லை. தொழிலாளர்களுக்கு சட்டஉதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுக்கு எழுதிஉள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடப்பாவில் 107 பேரும், சித்தூரில் 109 பேரும், திருப்பதில் 300 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top