வரத்து அதிகரித்ததால் வெங்காயம் விலை வீழ்ச்சி

பொள்ளாச்சி வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது.

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மேலும் தாராபுரம், ஒட்டச்சந்திரம் போன்ற பகுதியில் இருந்தும் சில நேரங்களில் வெங்காயம் விற்பனைக்கு வரும்.இங்கிருந்து உள்ளூர் தேவைக்கும், கேரளாவுக்கு வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் வடமாநிலங்களில் ஏற்பட்ட மழை உள்பட இதர பாதிப்புகள் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து குறைந்து போனது. இதனால் விலை அதிகரித்தது. தற்போது மீண்டும் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:–

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்த மாதம் வடமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைவாக இருந்தது. இதனால் விலை அதிகரித்தது. முதல் தர வெங்காயம் ஒரு கிலோ ரூ.50–க்கும், 2–ம் தர வெங்காயம் ஒரு கிலோ ரூ.40–க்கும் விற்பனை செய்யப்பட்டது.தற்போது வடமாநிலங்களில் இருந்தும், குறிப்பாக கர்நாடகாவில் இருந்தும் வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் தாராபுரம் பகுதியில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி முதல்தர வெங்காயம் ஒரு கிலோ ரூ.38–க்கும், 2–ம் தர வெங்காயம் ஒரு கிலோ ரூ.25–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் வெங்காயம் வரத்து அதிகரிக்கும். இதன் மூலம் மேலும் விலை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top