கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு உடல் மருத்துவப் பரிசோதனை

cbcidபொறியியல் பட்டதாரி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் யுவராஜூக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அரசு மருத்துவர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் யுவராஜூக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

இதைத் தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த திருச்செங்கோடு ரயில் பாதை, திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு யுவராஜை அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நாமக்கல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

முன்னதாக மூன்று மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த யுவராஜ், கடந்த ஞாயிற்றுக் கிழமை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரிடம் சரணடைந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top