தமிழக சட்டமன்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு விவகாரம்: விஜயகாந்த் மனு தள்ளுபடி

Vijayakanth-123451தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பக் கோரும் வழக்கில் மனுதாராக சேர்க்கக் கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விஜயகாந்தின் கோரிக்கை தொடர்பான மனு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதால், அங்கே புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் நிதிச்சுமை காரணமாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப முடியாது என தமிழக அரசு தெரிவித்ததும் விஜயகாந்த் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், தனது பங்குகள் உள்ள தொலைக்காட்சி மூலம் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதியளிக்க வேண்டும் என விஜயகாந்த் கோரியிருந்தார். அந்த வழக்கை தலைமை நீதிபதி எஹ்.எல். தத்து தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top