தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி

fa219953-04f8-49dd-a36b-8e667c3db4a6_S_secvpfதென் ஆப்பிரிக்காவில் பலத்த மழை பெய்கிறது. இதனால் அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. லிம்போபோ மாவட்டத்தில் லெப்காலாலே என்ற இடத்தில் கரை புரண்டோடிய வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலியாகினர்.

மேலும், அப்பகுதியில் 5 ஆயிரம் பேர் வெள்ளப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பலர் வீட்டின் கூரையின் மீது அமர்ந்து இருந்தனர். அவர்களும் மீட்கப்பட்டனர்.

வெள்ளத்தில் பல வீடுகளும், வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் பலர் இழுத்து செல்லப்படிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top