ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன் மோகன் ரெட்டி 6–வது நாளாக உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டி உடல் நிலை பாதிப்பு

568ce2f1-29f3-4d91-94d8-5f49214ea69b_S_secvpfஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரில் காலவரையற்ற உண்ணா விரதத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினார்.

இன்று 6–வது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது. அவரது போராட்டத்துக்கு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

மேலும் மாணவர்களும், பெண்களும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் மாணவர்கள் ஆங்காங்கே மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தனக்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை உற்சாகத்துடன் வரவேற்று பேசி வந்த ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சோர்வடைந்தார். உடலில் சர்க்கரை அளவு குறைந்தது. இதனால் உட்கார முடியாமல் படுத்து இருந்தார். இதனால் உண்ணா விரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். ஜெகனின் மனைவி பாரதியும் போராட்டத்தை கைவிடும்படி கேட்டார்.

ஆனால் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

மேலும் உண்ணா விரதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் பேசி வருவதை கண்டித்த அவர், மாநில அந்தஸ்து கிடைத்தால் அது நமது மாநிலத்துக்குதான் நல்லது. தொழிற்சாலைகள் உருவாகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் உணர வேண்டும். எனது போராட்டத்தை ஒடுக்க சந்திரபாபு நாயுடு முயற்சி செய்கிறார். அது நடக்காது என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top