முதல் ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா தோல்வி- ரோகித் சர்மா சதம் வீண்

d988ad39-e170-4baf-9250-d25f663732fc_S_secvpfஇந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த தென் ஆப்பிரிக்க அணி, டி வில்லியர்ஸ் சதத்தால் (104) ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது.

304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ரகானே களம் இறங்கினார். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. வழக்கமாக விராட் கோலிதான் அந்த இடத்தில் களம் இறங்குவார். இன்று ரகானே களம் இறக்கப்பட்டார்.

இவர் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்தியா 17.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ரோகித் சர்மா 48 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 100 ரன்களை தாண்டியது. ரோகித் சர்மாவைத் தொடர்ந்து ரகானே அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய ரகானே 82 பந்தில் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது 8-வது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி 18 பந்தில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது இந்தியா 40 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி 10 ஓவரில் 104 ரன்கள் தேவைப்பட்டது. ரோகித் சர்மாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி நிதானமாக விளையாட, ரோகித் சர்மா அதிரடி காட்டினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ரோகிர் சர்மா 132 பந்தில் 150 ரன்னைத் தொட்டார்.

கடைசி ஐந்து ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. 46-வது ஓவரில் ஒரு சிக்சருடன் 11 ரன்கள் சேர்த்தது. 47-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார். அவர் 133 பந்தில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 150 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ரெய்னா களம் இறங்கினார். இவர் 3 ரன்னில் எடுத்த நிலையில் இதே ஓவரின் 5-வது பந்தில் ரெய்னா அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 19 பந்தில் 31 ரன்கள் தேவைப்பட்டது.

6-வது விக்கெட்டுக்கு தோனியுடன் பின்னி ஜோடி சேர்ந்தார். 48-வது ஓவரை மோர்கல் வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் டோனி தலா இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த மூன்று பந்தில் மூன்று ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை ஸ்டெய்ன் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டோனி, முதல் மற்றும் 5-வது பந்தில் தலா இரண்டு ரன்கள் எடுத்தார். இதனால் அந்த ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ரபடா இந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் டோனி இரண்டு ரன்கள் எடுத்தார். அதன்பின் இரண்டு பந்தில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி 3 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தை தூக்கி அடித்த டோனி பந்து வீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 30 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.

கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் பின்னி அவுட் ஆனார். கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் மிஸ்ரா ஒரு ரன் எடுக்க இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.

ரோகித் சர்மாவின் 150 ரன்கள் வீணாய்ப் போனது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top