பீகாரில் கய்மூர் பகுதியில் மோடி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: மாவட்ட கலெக்டர் உத்தரவு

modi4243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 49 தொகுதிகளில் நாளை வாக்குபதிவு நடக்கிறது.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்ய மாவட்ட கலெக்டர் அனுமதி மறுத்துள்ளார்.

பீகார் மாநிலம் கய்மூர் மாவட்டம் மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதியாகும். ஜார்க்கண்ட், உத்தரபிரதேச மாநிலம் எல்லையொட்டி இந்த மாவட்டம் இருக்கிறது. நீண்ட காலமாக கய்மூர் மாவட்டத்தில் மாவோஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் 2–வது கட்டமாக 16–ந் தேதி தேர்தல் நடக்கிறது.

கய்மூரில் உள்ள பகுவா மைதானத்தில் பிரதமர் மோடியை வைத்து பொதுக் கூட்டம் நடத்த மாநில பாரதீய ஜனதா திட்டமிட்டது. அங்கு நாளை இந்த பொதுக் கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துவேஷ் செகரா இதற்கு அனுமதி மறுத்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு அவர் அனுமதி அளிக்க வில்லை. குறைந்த நபர்களை வைத்து கூட்டம் நடத்தப் போவதால் அனுமதி அளிக்குமாறு பா.ஜனதா கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் அதையும் நிராகரித்தார்.

மாநில அரசின் நிர்பந்தம் காரணமாகவே மோடி பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக்கிடம் புகார் மனு கொடுத்தது.

பீகார் மாநில பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்துக்கு சிறப்பு போலீஸ் படை ஒப்புதல் கொடுத்தது. ஆனால் மாநில அரசின் அழுத்தம் காரணமாகவே கலெக்டர் அனுமதி வழங்கவில்லை என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top