நாங்கள்தான் உண்மையான மனித நேய மக்கள் கட்சி: தஞ்சையில் தமிமூன் அன்சாரி பேட்டி

d39470f2-518c-4616-8368-adf07fd34386_S_secvpfதஞ்சையில் இன்று மனித நேய மக்கள் கட்சி போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிமூன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது–

மனித நேய மக்கள் கட்சியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

ஜவாஹிருல்லா விடுத்த அறிக்கையில் மனித நேய மக்கள் கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது என்று கூறி இருந்தார்.

ஆனால் இன்று பெரும்பாலான மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கொடியுடன் வந்து நாங்கள் தான் உண்மையான மனித நேய மக்கள் கட்சி என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தின் அழைப்பிதழ் ஜவாஹிருல்லாவுக்கு முறைப்படி அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பொதுக்குழு கூட்ட மேடையில் அவருக்கு தனி இருக்கை போடப்பட்டு உள்ளது.

அவர் இந்த கூட்டத்துக்கு வந்தால் அதில் அமர்ந்து கொள்ளலாம். அவர் எங்களுடன் இணைந்து கட்சி பணியாற்ற முன் வந்தால் அதற்கு தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மனித நேய மக்கள் கட்சியின் சட்ட விதி 13–ன் படி தலைமை நிர்வாக குழு ஒப்புதலோடு பொது செயலாளர் தான் தலைமை பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இந்த விதிக்கு முரணாக மேற்கு தாம்பரத்தில் கடந்த 6–ந் தேதியன்று பொதுக்குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தியவர்களை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கட்சி பொது செயலாளர், இணை பொது செயலாளர் ஆகியோரை நீக்கியதாக அறிவித்ததை கண்டிப்பதுடன் தமிமூன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் மீது முழு நம்பிக்கை வைத்து கட்சியை இன்னும் எழுச்சியுடன் வழி நடத்தி செல்லும் படி பொது செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகளை பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

ஜவாஹிருல்லா எப்போதும் போல் கட்சி நிர்வாக குழுவோடு இணைந்து மீண்டும் கட்சி பணியாற்றி கேட்டுக் கொள்கிறது.

கட்சி வளர்ச்சி பணிகள், நிர்வாக சீர்திருத்தம், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்தல் ஆகிய பணிகளை தலைமை நிர்வாக குழு மேற்கொள்ள பொதுக்குழு அனுமதி தருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லிமை கொலை செய்த அமைப்பை கண்டிப்பது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்தல் போன்ற நிகழ்வுகள் மனித உரிமைக்கு எதிரானது என்பதால் அதற்கு தடை விதித்த மாநில அரசுகள் தடையை நீக்க கேட்டுக் கொள்கிறோம்.

டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி வாடும் சூழ்நிலையை ஏற்படுத்தி தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்து காவிரி நீர் வழங்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் கர்நாடக அரசை கண்டிப்பது.

இந்த பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் நிலையை உணர்ந்து செயல்பட மத்திய அரசை வலியுறுத்துவது.

தமிழகத்தில் மது விலக்கை அமுல்படுத்த மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. இதற்காக கடும் முயற்சி செய்து வருங்கால தமிழ் சமுதாயம் மது மயக்கமின்றி வாழ வழி வகுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த பாடுபடுவோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top