பா.ஜனதா–பி.டி.பி. கூட்டணி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது, பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

சட்டசபையில் பாரதீய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள், தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டது போதுமானது கிடையாது என்று பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அப்துல் ராஷித் கூறிஉள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக சுயேட்சை எம்.எல்.ஏ. அப்துல் ராஷித்தை பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டபேரவைக்குள்ளையே தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சட்டசபையில் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜனதா–பி.டி.பி. கூட்டணி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது என்று கூறினார். “என்மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது எழுந்து நின்று, நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று முதல்-மந்திரி முப்தி முகமது சயீத் கூறியதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது போதுமானது கிடையாது.
நான் எந்தஒரு சட்டவிரோத செயலிலும் ஈடுபட்டது கிடையாது… என் சடலத்தின் மீது கோட்டை கட்டவேண்டும் என்பதை பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்,” என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பா.ஜனதா–பி.டி.பி. கூட்டணி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது என்றும் அப்துல் ராஷித் குற்றம் சாட்டிஉள்ளார். இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில கல்வித்துறை மந்திரி நயீம் அக்தார் ஷாகிப் தன்னிடம் பேசியதாக கூறினார். “பக்ரீத் பண்டிகையின் போது நீங்கள் குர்பானி கொடுக்க போகிறீர்களா? என்று அக்தரிடம் கேட்டேன் அப்போது அவர் என்னிடம் பேசியதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன். ஆமாம், நாங்கள் உன்னை குர்பானி கொடுக்க போகிறோம் என்று கூறினார். இன்று நடைபெற்று இருப்பது அக்தாரின் பேச்சுக்கு ஒரு பயிற்சியாகும்,” என்று அப்துல் ராஷித் கூறிஉள்ளார்.
“எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மதுபானம் குடிக்கும்போது, ஏன்? நான் மாட்டிறைச்சியை எடுக்க கூடாது. நாட்டு இப்போது காந்தியின் நாடாக இல்லை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோகன் பகவத் நாடாக மாறிவருகிறது,” என்றும் ராஷித் பேசிஉள்ளார். சட்டசபைத் தொடங்கியதும், அவைக்கு சென்று என்னுடைய இருக்கையை நோக்கி சென்றேன். அப்போது 6,8 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் என்னை நோக்கி வந்தார்கள்… அப்போது அவர்கள் என்னுடைய கழுத்து மற்றும் கால்களை பிடித்து கொண்டனர். என்னை தூக்கி எறிந்துவிட்டனர். பின்னர் நான் நினையில்லாத நிலைக்கு சென்றுவிட்டேன்,
பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. எதிர்க்கட்சி தலைவர் உமர் அப்துல்லா, அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்னை அழைத்து சென்றனர். என்று கூறிஉள்ளார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top