நாளை கடைசி 20 ஓவர் போட்டி: இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா?

45a8fd7b-d696-43dc-a74b-7e90e0898989_S_secvpfஇந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

முதல் 2 போட்டியிலும் தோற்று தொடரை இழந்த இந்திய அணி இந்த ஆட்டத்திலாவது வென்று ஆறுதல் அடையுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். முதல் ஆட்டத்தில் மோசமான பந்து வீச்சாலும், 2–வது ஆட்டத்தில் மோசமான பேட்டிங்காலும் தோல்வி ஏற்பட்டது.

இவை இரண்டையும் சரிசெய்து சம பலத்துடன் விளையாடினால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த இயலும். சிறந்த ஆல்ரவுண்டர் இல்லாதது இந்திய அணிக்கு பலவீனமே. முதல் 2 ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத ரகானே, அமித் மிஸ்ரா நாளைய போட்டியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் கழற்றி விடப்படலாம்.

தென் ஆப்பிரிக்க அணி 3–வது போட்டியிலும் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்துடன் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் அந்த அணி சிறப்புடன் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top