நான் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை – விஜய்… நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளார் – ஆவணங்களுடன் பேசும் வருமான வரித்துறை.. உண்மை யார் பக்கம்?

vijay

கடந்த 5 வருடங்களான நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து நேற்று நடிகர் விஜய், அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் தான் ‘சட்டத்தை பின்பற்றுபவன் ‘ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே வருமான வரித்துறை தரப்பில் இருந்து இதனை மறுத்துள்ளனர். நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நடிகர் விஜய் உள்ளிட்ட புலி படக்குழுவினர் வீடுகளிலும், நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் ரூ. 2 கோடி மதிப்புள்ள ரொக்கமும், தங்கமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

எது என்னவாக இருப்பினும் உண்மை வெகு விரைவில் வெளிவரத்தான் செய்யும். பொறுத்திருந்து பார்க்கலாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top