ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

railwayரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவார்கள்.

2014 – 15-ம் நிதியாண்டுக்கான இந்த போனஸ், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. முந்தைய 3 நிதியாண்டுகளை போலவே கடந்த நிதியாண்டுக்கும் 78 நாள் போனஸ் வழங்கப்படுகிறது.

ரயில்வேத் துறையின் இந்த முடிவால் ஒவ்வொரு பணியாளருக்கும் 8 ஆயிரத்து 897 ரூபாய் போனஸாக கிடைக்கும். இதன் மூலம் ரயில்வேக்கு 800 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனக் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top