கோகுல்ராஜ் கொலை வழக்கு:எனது கணவர் யுவராஜ் சரண் அடைய வாய்ப்புள்ளது மனைவி சுவேதா பேட்டி

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. தைத்தொடர்ந்து ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர்,  செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை ஆனார்கள். அவர்களை அழைத்துச் செல்ல யுவராஜின் மனைவி சுவீதா ஆத்தூர் வந்திருந்தார். அவர் 3 பேருக்கும் மாலை அணிவித்து வரவேற்க முயன்ற போது சிறை வளாகத்தில் மாலை அணிவிக்கக்கூடாது என்று போலீசார் கூறிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து மாலை அணிவிக்காமல் அவர்களை அழைத்துச் சென்றார். முன்னதாக சுவேதா நிருபரிடம் கூறியதாவது:-

கோகுல்ராஜ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக விசாரித்து வருகிறார்கள். எனது கணவர் (யுவராஜ்) சரண் அடைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top